6,000 மரக்கன்றுகள் எங்கே? முன்னாள் எம்எல்ஏ கொதிப்பு

6,000 மரக்கன்றுகள் எங்கே? முன்னாள் எம்எல்ஏ கொதிப்பு

ஒசூர்:

ஒசூர் மாநகரில் சாலையோரத்தில் நடப்பட்டதாக கூறப்படும் 6ஆயிரம் மரக்கன்றுகள் எங்கே என ஒசூர் முன்னாள் எம்எல்ஏ மனோகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில், ஒசூர் மக்கள் சங்கம் என்னும் தன்னார்வ அமைப்பு இயங்கி வருகிறது, இந்த இயக்கத்தின் சார்பில் ஏரிகள் தூர்வாறப்பட்டதாகவும் மேலும் ஒருகிலோமீட்டர் தூரத்திற்குள் 6 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டதாக குடியரசு தினவிழாவில் ஒசூர் மாநகராட்சி ஆணையர் பாலசுப்ரமணியம் அவர்கள் ஒசூர் மக்கள் சங்கத்திற்கு பரிசினை வழங்கியுள்ளார்.

இதுக்குறித்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த ஓசூர் முன்னாள் எம்எல்ஏவும், ஐஎன்டியூசி.,யின் தேசிய நிர்வாகியுமான மனோகரன், ஒசூர் மக்கள் சங்கத்தின் சார்பில், ஒசூர் ஆர்சி சர்ச் முதல் முனீஸ்வரன் நகர் வரை உள்ள ஒருகிலோ மீட்டர் தூரத்திற்குள் 6 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டதாக கூறப்படுவது வரவேற்கத்தக்கது என்றாலும், நட்ட உடன் தனியார் அமைப்பின் பணி முடிந்தது, தற்போது மாநகராட்சி பராமரிக்க வேண்டிய நிலையில் 6 ஆயிரம் மரக்கன்றுகள் எங்கே என கேள்வி எழுப்பி உள்ளார்.

நட்ட மரங்கள் என்னவானது, அல்லது மரக்கன்றுகள் நடாமலேயே மாநகராட்சி ஆணையர் விருது வழங்கியிருந்தால் அதற்கான அவசியம் என்ன என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

இதற்கு மாநகராட்சி ஆணையர் பதிலளிப்பாரா என பொருத்திருந்து பார்ப்போம்…

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்