கெலவரப்பள்ளி அணையின் தூர்வாரிய கால்வாய்களை மு.அமைச்சர் விவசாயிகளுடன் நேரில் பார்வை

கெலவரப்பள்ளி அணையின் தூர்வாரிய கால்வாய்களை மு.அமைச்சர் விவசாயிகளுடன் நேரில்  பார்வை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையிலிருந்து ஆண்டுதோறும் முதல்,மற்றும் இரண்டாம் போக பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.

கெலவரப்பள்ளி அணையின் நீரால் இரண்டு பிரதான கால்வாய்கள் மூலம் 22 கிராமங்களில் உள்ள 8000 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெற்று வருகின்றன.

அணை கட்டி முடிக்கப்பட்ட பின்பாக கால்வாய்களை சீரமைக்க வேண்டுமென்கிற விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தமிழக முதல்வர் 2.75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கால்வாய்களை தூர்வாரி குடிமராமத்து பணிகளை மேற்க்கொள்ள உத்தரவிட்டிருந்தார்.

ஒன்றரை மாதங்களாக நடைப்பெற்ற குடிமராமத்து பணிகளில்

இடதுபுறமாக உள்ள 10 கிமீ தூரம் வலதுபுறமாக உள்ள 11.6 கிலோ மீட்டர் தூரத்தை தூர்வார 2.75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கால்வாயின் முட்புதர்கள் அகற்றி அரிப்பு ஏற்ப்பட்டுள்ள இடங்களை மண்கொட்டி கரைகளை சரிசெய்யும் பணிகள் கொரோனா ஊரடங்கிலும் நிறைவேற்றப்பட்டது.

இதனையடுத்து அடுத்தவாரம் கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையிலிருந்து முதல்போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுவதால் கால்வாய்கள் தூய்மைப்படுத்தப்பட்டுள்ள பணிகளை முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி அவர்கள் விவசாயிகளுடன் நேரில் பார்வையிட்டார்.

பின்னர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த ஓசூர் பகுதி விவசாயிகள்:
முன்னாள் தமிழக முதல்வர், புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்களின் ஆட்சியில் கெலவரப்பள்ளி அணை கட்டப்பட்டிருந்தாலும் கால்வாய்கள் பழுதடைந்தே காணப்பட்டன விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றிய தமிழக அரசிற்கும், உறுதுனையாக இருந்த முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.

கால்வாய்களை பார்வையிட்ட முன்னாள் அமைச்சருடன் ஏராளமான விவசாயிகளும் பங்கேற்றனர்.அப்போது ஓசூர் ஒன்றியக்குழு தலைவர் சசி வெங்கடசாமி,மாவட்ட கவுன்சிலர் ரவிக்குமார், ஹரீஷ் ரெட்டி உள்ளிட்ட அதிமுகவினரும் பங்கேற்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்