சுவர் ஏறி குதித்த கவுன்சிலர்

சுவர் ஏறி குதித்த கவுன்சிலர்

மதுரை:

மதுரை அருகே இன்று பதவியேற்ற சுயேச்சை கவுன்சிலர் ஒருவர் சுவர் ஏறி குதித்து தப்பியோடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையை அடுத்த செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய 8வது வார்டு கவுன்சிலராக, சுயேச்சை வேட்பாளரான அரவிந்த் வெற்றிபெற்றார். 24 வயதாகும் அர்விந்த் பொறியியல் பட்டதாரி மற்றும் வழக்கறிஞர் படிப்பையும் முடித்துள்ளார்.

இந்நிலையில், வெற்றி பெற்றவர்கள் இன்று செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களாக பதவியேற்றுக்கொண்டனர். 8வது வார்டு உறுப்பினராக அரவிந்த் பதவியேற்றவுடன், சுவர் ஏறி குதித்து காரில் தப்பியோடினார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

செல்லம்பட்டி ஒன்றியத்தில் மொத்தம் 16 வார்டுகள் இருக்கும் நிலையில், 9 வார்டில் அதிமுகவும், 6 வார்டுகளில் திமுகவும், 1 வார்டில் சுயேட்சையான அரவிந்தும் வெற்றி பெற்றனர்.

ஆனால், ஒன்றிய தலைவர் மற்றும் சுயேட்சை தலைவர் ஆகிய பதவிகள் அதிமுக வசமே செல்ல இருக்கும் நிலையில், சுயேட்சையின் ஆதரவு எந்த வகையிலும் இரு கட்சிக்கும் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்