உலகின் முதலாவது எண்ணெய் கிணறு அமெரிக்காவில் தோண்டப்பட்ட நாள் ஆகஸ்ட் 27

உலகின் முதலாவது எண்ணெய் கிணறு அமெரிக்காவில் தோண்டப்பட்ட நாள் ஆகஸ்ட் 27

1813 – பிரெஞ்சுப் பேரரசன் முதலாம் நெப்போலியன் ஆத்திரிய, உருசிய, புருசியப் பெரும் படைகளை திரெஸ்டன் சமரில் வென்றான்.

1828 – பிரேசிலுக்கும் அர்கெந்தீனாவுக்கும் இடையில் இடம்பெற்ற சமரசப் பேச்சுக்களில் உருகுவை தனிநாடாக அறிவிக்கப்பட்டது.

1832 – அமெரிக்காவின் சவுக் பழங்குடித் தலைவர் பிளாக் ஹாக் அமெரிக்க அதிகாரிகளிடம் சரணடைந்தார். பிளாக் ஹாக் போர் முடிவுக்கு வந்தது.

1859 – அமெரிக்காவில் பென்சில்வேனியா மாநிலத்தில் பாறை எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது. இதுவே உலகில் வணிகத்துக்காக வெற்றிகரமாகத் தோண்டப்பட்ட முதலாவது எண்ணெய்க் கிணறு ஆகும்.

1881 – அமெரிக்காவில் புளோரிடா மாநிலத்தில் இடம்பெற்ற ஜியார்ஜியா சூறாவளியினால் 700 பேர் வரையில் இறந்தனர்.1883 – இந்தோனேசியாவில் கிரக்கத்தோவா எரிமலைத் தீவு வெடித்ததினால் உருவாகிய ஆழிப்பேரலையினால் ஜாவா, சுமாத்திரா தீவுகளில் பல இடங்கள் அழிந்தன. கிட்டத்தட்ட 36,417 பேர் உயிரிழந்தனர். சுற்றுச்சூழலில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

1893 – ஐக்கிய அமெரிக்காவில் கடல் தீவுகளில் இடம்பெற்ற சூறாவளியில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்