இங்கிலாந்து பந்துவீச்சில் சுருண்ட நியூசிலாந்து!

  • In Sports
  • July 4, 2019
  • 185 Views
இங்கிலாந்து பந்துவீச்சில் சுருண்ட நியூசிலாந்து!

செஸ்டர் லீ ஸ்டிரீட்:

ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், இங்கிலாந்தின் பந்துவீச்சில் நியூசிலாந்து தோலிவியை தழுவியது.

இங்கிலாந்தின் செஸ்டர் லீ ஸ்டிரீடில் நடைபெறும் 41வது லீக் ஆட்டமாக நியூசிலாந்து அணியுடன் இங்கிலாந்து அணி மோதுகிறது. முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.

இந்த போட்டியில் 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 305 ரன்களை இங்கிலாந்து அணி எடுத்தது. இதனைத்தொடர்ந்து 306 ரன்கள் இலக்காகக்கொண்டு நியூசிலாந்து அணி விளையாடியது.

நியூசிலாந்து அணி தொடர்ந்து இங்கிலாந்தின் பந்துவீச்சில் திணறி தவித்தது. 45வது ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 186 ரன்களே எடுத்து படுதோல்வியை சந்தித்தது. இதனால் இங்கிலாந்து அணி அபார வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் 3ம் இடத்தை பிடித்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்