இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இங்கிலாந்து!

  • In Sports
  • July 11, 2019
  • 190 Views
இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இங்கிலாந்து!

பர்மிங்கம்:

உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து அணி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

ஐசிசி உலகக்கோப்பை தொடரின் 2வது அரையிறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியும் ஆஸ்திரேலியாவும் மோதியது. முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வுசெய்து விளையாடியது. 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 223 ரன்களை எடுத்தது.

இந்நிலையில், 224 ரன்கள் இலக்காக விளையாடி இங்கிலாந்து அணி, 32.1வது ஓவரிகளிலேயே 2 விக்கெட் இழப்புக்கு 226 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. இதனையடுத்து, வரும் 14ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணி, நியூசிலாந்து அணியுடன் மோதுகிறது.

 

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்