நியூசி.,க்கு எதிராக இங்கிலாந்து 305 ரன்கள் குவிப்பு!

  • In Sports
  • July 3, 2019
  • 173 Views
நியூசி.,க்கு எதிராக இங்கிலாந்து 305 ரன்கள் குவிப்பு!

செஸ்டர் லீ ஸ்டிரீட்:

ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்துக்கு எதிராக இங்கிலாந்து அணி 305 ரன்களை குவித்தது.

இங்கிலாந்தின் செஸ்டர் லீ ஸ்டிரீடில் நடைபெறும் 41வது லீக் ஆட்டமாக நியூசிலாந்து அணியுடன் இங்கிலாந்து அணி மோதுகிறது. முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.

இந்த போட்டியில் 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 305 ரன்களை இங்கிலாந்து அணி எடுத்தது. இதனைத்தொடர்ந்து 306 ரன்கள் இலக்காகக்கொண்டு நியூசிலாந்து அணி விளையாடவுள்ளது.

அதிகபட்சமாக இங்கிலாந்தின் பேர்ஸ்டோவ் 99 பந்துகளில் 106 ரன்கள் எடுத்திருந்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்