சூளகிரி பகுதிகளில் அதிகரிக்கும் சாலை விபத்து மரணங்கள்: கட்டிமுடித்தும் திறக்கப்படாத அவசரகால மருத்துவமனைய திறக்ககோரி வாகன ஓட்டிகள் கோரிக்கை

சூளகிரி பகுதிகளில் அதிகரிக்கும் சாலை விபத்து மரணங்கள்: கட்டிமுடித்தும் திறக்கப்படாத அவசரகால மருத்துவமனைய திறக்ககோரி வாகன ஓட்டிகள் கோரிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த சூளகிரி பகுதி தமிழகத்திலேயே அதிகப்படியான சாலை விபத்துக்களால் மரணங்கள் ஏற்ப்படக்கூடியதாக சமீபத்திலான ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கிருஷ்ணகிரி – ஒசூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகளுக்கு செல்லக்கூடிய வாகனங்கள், பள்ளி கல்லூரி வாகனங்கள் என எந்நேரமும் போக்குவரத்து நெரிசலாக காணப்படும் பகுதியாக இருப்பதால் விபத்துக்களும் அதிகரித்து வருகின்றது, விபத்து ஏற்ப்பட்டவர்கள் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு காத்திருந்து கிருஷ்ணகிரி, ஒசூர் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்வதற்குள் உயிரிழப்புக்கள் ஏற்ப்பட்டு விடுவதால்

உயிரிழப்புக்களை தடுக்க சூளகிரி – கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை மில்லத்நகர் பகுதியில் அனைத்து தீவிர சிகிச்சை உபகரணங்கள் கொண்ட அவசரகால மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.

அவசரகால மருத்துவமனை கட்டப்பட்டு 6 மாத காலமாகியும் இதுவரை திறப்பு விழா காணவில்லை, ஊரடங்கு சட்டம் தளர்வு காலத்திலும் சூளகிரி பகுதியில் தொடர் சாலை விபத்து மரணங்களால் அவசரகால மருத்துவமனையை உயிரிழப்புக்களை தடுப்பதற்காக திறக்க வேண்டுமென்கிற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்