பூரம் திருவிழாவில் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்தவர்களின் படங்களுடன் யானைகள்..!

பூரம் திருவிழாவில் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்தவர்களின் படங்களுடன் யானைகள்..!

திருச்சூர்:

கேரளாவின் உலகப்புகழ்பெற்ற பூரம் திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. விழாவில் 100க்கும் மேற்பட்ட யாணைகளின் அணிவகுப்பை பார்க்க ஏராளமானோர் அங்கு கூடினர்.

திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ஆரட்டுபுழா கோவிலில் கொண்டாடப்படும் பூரம் விழாக்கு, பரமேக்காவு பகவதி மற்றும் திருவம்படி கிருஷ்ணர் கோவிலில் கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவில் செண்டை மேளம், மத்தாளம், எடக்கா, திமிலா, கொம்பு ஆகிய வாத்தியங்களின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலும், தங்க ஜரிகைகளால் ஆன நெற்பட்டம், மயிலிறகுகளாலான ஆலவட்டம் உள்ளிட்டவற்றால் அலங்கரிப்பட்ட யானைகள் அணிவகுத்து நின்றது பக்தர்களை வெகுவாக கவர்ந்தது. புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் உருவப்படங்களை தாங்கியபடி யானைகள் அணிவகுத்து வந்தன.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்