15 யானைகள் தஞ்சம்; விவசாயிகள் கவலை

15 யானைகள் தஞ்சம்; விவசாயிகள் கவலை

ஒசூர்:

தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் 15 காட்டு யானைகள் தஞ்சமடைந்துள்ளதால், ஓசூர் வனப்பகுதிக்கு இடம்பெயற வாய்ப்புள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் தற்போது 15 காட்டு யானைகள் தஞ்சமடைந்துள்ளன. இந்த யானைகள் ஓசூர் அருகே உள்ள சானமாவு வனப்பகுதிக்கு இடம்பெற வாய்ப்பு உள்ளதால்,சானமாவு பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வானத்திலிருந்து ஜவலகிரி வனப்பகுதிக்கு100 யானைகள் நுழைந்துள்ளன.

இந்த யானைகள் கடந்த ஒரு மாதமாக ஜவளகிரி வனப்பகுதியில் தஞ்சமடைந்து வனப்பகுதி அருகே உள்ள விவசாய நிலங்களில் பயிரிட்டுள்ள ராகி,அவரை,தக்காளி ஆகிய விவசாய பயிர்களை சேதப்படுத்தி வந்தன.

இந்த யானைகள் கட்டுப்படுத்த 60க்கும் மேற்பட்ட வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தாலும் யானைகள் இரண்டு குழுக்களாக கூட்டத்திலிருந்து பிரிந்து நொகனூர் வழியாக தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு இடம்பெயர்ந்தது இந்த யானைகள் ஓசூர் அருகே உள்ள சானமாவு வனப்பகுதிக்கு இடம்பெற வாய்ப்பு உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தற்போது சானமாவு பகுதி ஒட்டியுள்ள ராமாபுரம் பாத்தக்கோட்டா ஆழியாளம் பேரண்டபள்ளி ஆகிய பகுதிகளில் நெல் அறுவடைக்கு தயாராக இருப்பதால் நெல் பயிர்களை சேதப்படுத்துமென விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.

தற்போது தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் தஞ்சமடைந்த 15 காட்டு யானைகள் உட்பட பன்னார்கட்டாவிலிருந்து தமிழகம் வந்த 100க்கணக்கான யானைகளை தடுத்து மீண்டும் ஜவளகிரி வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என விவசாயிகள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்