50 யானைகள்; விவசாயிகள் அச்சம்

50 யானைகள்; விவசாயிகள் அச்சம்

ஒசூர்:

தேன்கனிக்கோட்டை வனப்பகுதியிலிருந்து ஊடேத்துர்க்கம் பகுதிக்கு இடம்பெயர்ந்த 50 காட்டுயானைகளால் ராகி அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி தமிழக மாநில எல்லைகளாகவும் அடர்வனப்பகுதியாகவும் இருந்து வருகிறது.

இந்த வனப்பகுதிகளை சுற்றிலும் ராகிபயிரிடப்படுவதால் அவற்றை உண்பதற்காக டிசம்பர் மாதங்களில் கர்நாடக மாநிலம் பன்னார்கட்டாவிலிருந்து வெளியேறும் காட்டுயானைகள் தமிழகத்தின் ஜவளகிரி வனப்பகுதி வழியாக இந்த வனப்பகுதிக்குள் நுழைவதை வழக்கமாக கொண்டுள்ளன.

தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் இருந்த 100 யானைகளில், 30 யானைகள் ஒருக்குழுவாக பிரிந்து சானமாவு வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்தன, நேற்று இரண்டாவது குழுவாக பிரிந்த 50 காட்டுயானைகள் ஓசூர் அடுத்த ஊடேத்துர்க்கம் என்னுமிடத்தில் தற்போது தஞ்சமடைந்துள்ளன.

இந்தாண்டு 3 குழுக்களாக யானைகள் பிரிந்திருப்பதால், ராகியை அறுவடை செய்யும் பணிகளில் மும்முரம் காட்டிவரும் விவசாயிகள் கலக்கமடைந்துள்ளனர்.

அதிகாலை நேரங்களில் வயல்பகுதிக்கு செல்ல அச்சமடைந்துள்ள விவசாயிகள் யானைகளை ஒன்றிணைத்து ஜவளகிரி வனப்பகுதிக்குள் விரட்ன வேண்டுமென வனத்துறையினருக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

மேலும், ஊடேத்துர்க்கம் வனப்பகுதி லிக்கணம்பட்டி என்னுமிடத்திற்கு வந்த யானைகளை படம் பிடிக்கவும், செல்பி எடுக்கவும் ஆபத்தை உணராமல் இளைஞர்கள் வனப்பகுதிக்குள்ளாகவே சென்று அருகில் நின்று வருவதை தவர்க்குமாறு வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்,

யானை ஒன்று இளைஞர்களை விரட்டும் வீடியோ, அவர்களின் செல்போனில் படம் பிடிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்