யானைகள் கூட்டம்; வனத்துறை எச்சரிக்கை

யானைகள் கூட்டம்; வனத்துறை எச்சரிக்கை

ஒசூர்:

ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதிக்குள் 30 காட்டுயானைகள் சுற்றித்திரிவதால், கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த சானமாவு வனப்பகுதியினுள் தற்போது 30 காட்டுயானைகள் இருப்பதால் பொதுமக்கள் பாதுகப்பாக இருக்குமாறு ஓசூர் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக மாநில எல்லையான நொகனூர் வனப்பகுதியில் சுற்றித்திரிந்த 25 காட்டுயானைகள் தேன்கனிக்கோட்டை,ஊடேத்துர்க்கம் வழியாக ஓசூர் – இராயக்கோட்டை மாநில நெடுஞ்சாலையை கடந்து சானமாவு வனப்பகுதிக்குள் நேற்று நள்ளிரவில் இடம்பெயர்ந்துள்ளன.

தென்பெண்ணை ஆறு செல்லும் சானமாவு வனப்பகுதி ஒட்டிய கிராமங்களில் பல்லாயிரக்கணக்கில் நெற்பயிர் நடவுப்பணி நடைப்பெற்று, தற்போது அறுவடை பணிகள் தொடங்க உள்ளநிலையில், இந்த காட்டுயானைகள் நெற்பயிரை திட்டமிட்டு, ஆண்டுதோறும் டிசம்பர் மாத துவக்கத்திற்குள் வருவதும் நெற்பயிர்களை தின்றும் நாசப்படுத்தும் யானைகளால் ஆடு, மாடு மேய்ச்சலுக்கு செல்வோர், விவசாயிகள் என யானைகளால் தாக்கப்பட்டு உயிரிழப்புக்கள் போன்ற சோக சம்பவங்களும் அரங்கேறும்.

மீண்டும் இந்த ஆண்டு வழக்கத்திற்கு போல் கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியிலிருந்து வெளியேறி ஜவளகிரி வனக்காடு வழியாக சானமாவு வனப்பகுதிக்குள் 25 யானைகள் வந்துள்ளன.

ஏற்கனவே சானமாவு வனப்பகுதியினுள் 5 யானைகள் இருந்து வரும் நிலையில், தற்போது அவற்றின் எண்ணிக்கை 30ஆக அதிகரித்துள்ளது.

நெல் அறுவடையை தீவிரப்படுத்துமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தி வரும் வனத்துறையினர், சானமாவு வனப்பகுதி ஒட்டிய இராமாபுரம்,போடூர்,ஆழியாளம்,பாத்தக்கோட்டா உள்ளிட்ட கிராமத்தினர் ஆடு மாடு மேய்ச்சலுக்கு வனப்பகுதிக்குள் செல்ல வேண்டாம் விளைநிலங்களுக்கு இரவு காவல் செல்வதை தவிர்த்து, இரவில் வீட்டின் முன்பக்க விளக்குகளை தொடர்ந்து எரிய விடுங்கள் எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்