மின்வேலியில் சிக்கி யானை பலி

மின்வேலியில் சிக்கி யானை பலி

ஒசூர்:

ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே, விளைநிலத்திற்கு அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழதது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே உள்ளது மலசோனை கிராமம். இந்த கிராமம் வனப்பகுதிக்கு மிக அருகாமையில் இருப்பதால் வனவிலங்குகள் தோட்டத்திற்குள் புகுந்து நாசப்படுத்தாமல் இருக்க சோலார் மின்வேலியை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சோலர் மின்வேலியில் நுழையும் மான்,யானை உள்ளிட்டவைகள் லேசாக மின்சாரம் பாய்ந்து பயந்து ஓடிவிடும். ஆனால், மலசோனையில் நாகாச்சாரி என்பவருக்கு சொந்தமான தக்காளி விவசாய தோட்டம் ஒன்றிற்கு அனுமதியின்றி நேரடியாக அதிக திறன்கொண்ட மின்சாரத்தை மின்வேலியில் செலுத்தப்பட்டு வந்துள்ளது.

நேற்று இரவு 12 வயது மதிப்புடைய காட்டு ஆண்யானை ஒன்று தோட்டத்திற்குள் நுழைந்தபோது அதிக மின்சக்தி காரணமாக யானை மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிருக்கு போராடி வந்துள்ளது.

யானை காயமுற்ற தகவலை அறிந்து வந்த தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் மருத்துவக்குழுவினர் உடன் சம்பவ இடத்திற்கு சென்று யானைக்கு சிகிச்சை அளிப்பதற்குள்ள பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

வனத்துறையினர் ஏன் அதிகஅளவில் மின்சாரம் செலுத்தப்பட்டது, அனுமதியின்றி மின்சாரத்தை வேலியில் பாய்த்தது ஏன் என்கிற விசாரணையை தொடங்கி உள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்