கிராமத்துக்குள் புகுந்த யானை

கிராமத்துக்குள் புகுந்த யானை

ஒசூர்:

தேன்கனிக்கோட்டை அருகே கிராமத்திற்குள் புகுந்த ஒற்றையானை பல மணிநேர போராட்டத்திற்கு பிறகு வனப்பகுதிக்கு விரட்டியடித்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் கர்நாடகாவிலிருந்து வந்த யானை கூட்டம் முகாமிட்டுள்ளது.

அந்த கூட்டத்திலிருந்து பிரிந்த ஒற்றை காட்டுயானை தேன்கனிக்கோட்டை வனப்பகுதி சுற்றிலும் உள்ள கிராம மக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்து வரும்நிலையில்,
இன்று தேன்கனிக்கோட்டை வனப்பகுதியிலிருந்து வந்த ஒற்றையானை கேரட்டி என்னும் கிராமத்திற்குள்ளாகவே நுழைந்தது.

யானை கண்டதும் அலறி அடித்து ஓடிய பொதுமக்கள் தேன்கனிக்கோட்டை வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர், பொதுமக்களின் உதவியுடன் நீண்ட நேரம் போராடி ஒற்றையானையை அருகில் உள்ள வனப்பகுதிக்கு விரட்டியடித்தனர்.

யானை விரட்டப்பட்டிருந்தாலும் இரவு வெளியே வரும் என்பதால் தேன்கனிக்கே £ட்டை வனப்பகுதி ஒட்டிய ஒசட்டி,கேரட்டி, கண்டகானப்பள்ளி, மலசோணை, ப £லதோட்டனப்பள்ளி உள்ளிட்ட கிராம மக்கள் இரவு நேர பயணங்களை தவிர்த்தும், ஆடு மாடு மேய்ச்சலுக்கு எனப்பகுதிக்குள் செல்வதை தவிர்த்து பாதுகாப்பாக இரு க்குமாறு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்