மீண்டும் குட்டி யானை தவிப்பு

மீண்டும் குட்டி யானை தவிப்பு

ஒசூர்:

ஒசூர் அருகே, யானை கூட்டத்திலிருந்து வழி தவறி குட்டி யானை ஒன்று மீண்டும் சுற்றித்திரிகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் வனக்கோட்டம் சானமாவு வனப்பகுதியில் 20க்கும் மேற்ப்பட்ட காட்டுயானைகள் தொடர்ந்து முகாமிட்டு, இரவு நேரங்களில் அருகில் உள்ள கிராமங்களுக்கு செல்லும் யானைகள் விடியற்காலை மீண்டும் வனப்பகுதி க்கு சென்றுவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளன.

கடந்த 15 நாட்களுக்கு முன்னதாக காட்டுயானை கூட்டம் சானமாவு வனப்ப குதியிலிருந்து அகரம் கிராம பகுதிக்கு சென்றபோது காட்டுயானை கூட்டத்திலிருந்து 8 மாதங்களேயான குட்டியானை வழி தவறி சுற்றி திரிந்தது.

8 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர் சானமாவு காட்டில் இருந்த தாய் யானை கூட்டத்துடன் சேர்ந்திருந்தனர்.

இந்த நிலையில், மீண்டும் தாய் மற்றும் யானை கூட்டத்திலிருந்து பிரிந்து வழிதவறியாக குட்டியானை, சானமாவு கிராமததின் அருகே உள்ள ஏரி பகுதியில் வட்டமிட்டு வருகிறது

பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ள நிலையில், பொதுமக்கள் குட்டியானை அருகே சென்று படம் பிடித்து வருவதால், குட்டியை தேடி தாய் யானை வரும் சூழல் இருப்பதால் பொதுமக்கள் குட்டியானை அருகில் செல்வதை தவிர் க்குமாறு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்