6000 வாடகை எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

  • In Chennai
  • January 18, 2020
  • 189 Views
6000 வாடகை எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

சென்னை:

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் விரைவில் 6000 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் டகைக்கு விடப்படும் என ‘ஃப்ளை’ நிறுவனம் தெரிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (சிஎம்ஆர்எல்) ‘ஃப்ளை’ வாடகை சேவை நிறுவனமும் இணைந்து, வாடகை மின்சார ஸ்கூட்டர்களை ஒரு நிமிடத்திற்கு ₹ 1 க்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

சென்னையில் அலந்தூர், நந்தனம், கிண்டி மற்றும் லிட்டில் மவுண்ட் ஆகிய 4 மெட்ரோ நிலையங்களில் இருந்து ‘ஃப்ளை’ இயங்குகிறது. காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாடகை சேவை தொடங்குகிறது.

சவாரி முடிந்த பிறகு, பயணிகள் ஸ்கூட்டரை ஃப்ளை மண்டலத்திற்குள் எங்கு வேண்டும £னாலும் விட்டுவிட்டு செல்லலாம். இந்த சேவையைப் பெற, ‘ஃப்ளை’ ஆப்பை கூ குள் பிளேவில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

அடுத்த ஒரு வருடத்தில் 6000க்கும் மேற்பட்ட வாடகை எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்த அந்நிறுவனம் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்