சென்னையில் 2 வாரத்தில் மின்சார பேருந்துகள்..!

சென்னையில் 2 வாரத்தில் மின்சார பேருந்துகள்..!

சென்னை:

சென்னையில் மின்சார பேருந்துகளின் சோதனை ஓட்டம் தற்போது நடைபெற்றுவரும்நிலையில், 2 வாரத்திற்குள் மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படம் என போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

பேரவையில் திமுக எம்எல்ஏ சபா.ராஜேந்திரன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முதற்கட்டமாக 100 மின்சார பேருந்துகள் வாங்க இருப்பதாகவும், சென்¬னையில் 80 பேருந்துகளும், கோவை மற்றும் மதுரையில் தலா 10 மின்சார பேருந்துகளும் இயக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.

தற்போது அதன் சோதனை ஓட்டம் நடைபெற்றுவருவதாகவும், 2 வாரங்களில் சென்னையில் மின்சார பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்