தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது சாத்தியமில்லை

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது சாத்தியமில்லை

தமிழகத்தில் தற்போது பள்ளிகளை திறப்பதற்கான சாத்தியம் இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

இன்று ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் செங்கோட்டையன் கூறியது:-

*தமிழகத்தில் தற்போது பள்ளிகளை திறப்பதற்கான சாத்தியம் இல்லை.

*நாட்டிலேயே கல்வியில் வியக்கத்தக்க மாநிலமாக தமிழகம் உள்ளது.

*நீட் தேர்வில் தமிழக பாடத்திட்டத்தில் இருந்து 174 கேள்விகள் இடம் பெற்றிருந்தன.முழுமையான கல்விக்கட்டணம் வசூலித்த தனியார் பள்ளிகள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

*2.5 லட்சம் தனியார் பள்ளி மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ந்த நிலையில் செப்டம்பர் இறுதி வரை சேர்க்கை நடக்கும்.

*15 இடங்களில் தொடக்க பள்ளிகளும், 10 இடங்களில் உயர்நிலைப்பள்ளிகளும் தொடங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்