திமுக அனுமதி வாங்கித்தர வேண்டும் : முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள்!

திமுக அனுமதி வாங்கித்தர வேண்டும் : முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள்!

நாடாளுமன்றத்தில் அதிக உறுப்பினர்களை வைத்துள்ள திமுக, வேளாண் மண்டலத்துக்கு மத்திய அரசிடம் அனுமதி வாங்கித் தர வேண்டும் என முதலமைச்சர் வேண்டுகோள்சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின் போது பேசிய அமைச்சர் தங்கமணி, ”முதலமைச்சர் விவசாயியாக இருந்த காரணத்தினால்தான் டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கும் வகையில், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தார்” என தெரிவித்தார். விடுத்துள்ளார்.அப்போது குறுக்கிட்டு பேசிய எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன், ”டெல்டா மாவட்டங்களை வேளாண் மண்டலமாக அறிவித்ததை திமுக வரவேற்பதாகவும், அதே நேரம் வேதாந்தா உள்ளிட்ட நிறுவனங்கள் டெல்டா மாவட்டங்களில் எந்த பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய பிறகு அறிவித்திருந்தால் வரவேற்றிருப்போம்” என்றார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன், ”டெல்டா மாவட்டங்களை வேளாண் மண்டலமாக அறிவித்ததை திமுக வரவேற்பதாகவும், அதே நேரம் வேதாந்தா உள்ளிட்ட நிறுவனங்கள் டெல்டா மாவட்டங்களில் எந்த பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய பிறகு அறிவித்திருந்தால் வரவேற்றிருப்போம்” என்றார்.

இதற்கு பதிலளித்துப் பேசிய முதலமைச்சர், ”அதிமுக உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் சீட்டைத் தேய்த்து கொண்டிருக்கிறார்கள் என திமுகவினர் கடந்த காலங்களில் விமர்சித்தனர். தற்போது திமுக அதிக உறுப்பினர்களை கொண்டுள்ளது. அவர்கள் தான் மத்திய அரசிடம் வாதிட்டு, வேளாண் மண்டலத்துக்கு அனுமதி பெற்றுத்தர வேண்டும்” என கூறினார்.
அதற்கு பதிலளித்த துரை முருகன், ”நீங்கள் அறிவிப்பீர்கள், நாங்கள் அனுமதி பெற்று தர வேண்டுமா?” என கேள்வி எழுப்பினார். மேலும் அதிமுகவைப் போல நாங்கள் மத்திய அரசிடம் ஒட்டி உறவாட வில்லை, எதிரும் புதிருமாகத்தான் இருக்கிறோம் என பதிலளித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்