இ பாஸ் எளிதாக கிடைக்க என்ன செய்ய வேண்டும்.. செய்யும் தவறுகள் என்ன?

இ பாஸ் எளிதாக கிடைக்க என்ன செய்ய வேண்டும்.. செய்யும் தவறுகள் என்ன?

முறையாக விண்ணப்பித்தும் இபாஸ் அனுமதி கிடைக்வில்லை என தமிழகம் முழுவதும் பரவலாக புகார்கள் எழுந்துள்ளது. ஆனால் அதிகாரிகள் வட்டாரங்கள் இதனை மறுத்துள்ளன. இபாஸ் எளிதாக கிடைக்க ஆவணங்களை முறையாக சமர்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்..

தமிழகத்தில் லாக்டவுன் அறிவிக்கப்பட்ட பிறகு இ பாஸ் இருந்தால் மட்டுமே ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு இன்னொரு மாவட்டத்திற்கு செல்ல முடியும் என்கிற நிலை உள்ளது. திருமணம், மருத்துவம், இறப்பு மற்றும் மருத்துவ அவசரத் தேவைகள், சுற்றுலா வந்து சிக்கியவர்கள், அரசு ஒப்பந்தங்களில் பங்கேற்பதற்கு, அரசு பணிகளுக்கு ஆகிய காரணங்களுக்கு மட்டுமே தரப்படுகிறது.

இதன்படி ஒரு மாவட்டத்திற்குள்ளேயே என்றால் மட்டும் இ பாஸ் தேவையில்லை.ஆனால் மக்கள் தாங்கள் வசிக்கும் மாவட்டத்தில் இருந்து பிற மாவட்டத்துக்கு செல்ல விரும்பினால் கட்டாயம் இ-பாஸ் கேட்டு விண்ணப்பிக்க வேண்டும். இதற்கென தமிழக அரசு இணைதள முகவரியை அறிவித்துள்ளது.

கிடைத்தா ஒரே பாஸ்
அரசு அறிவிப்பு வெளியிட்ட பின்னர் பலரும் இ-பாஸ் அனுமதி கேட்டு ஆா்வத்துடன் விண்ணப்பித்தார்கள்.. இவா்களில் பெரும்பாலானோருக்கு முக்கிய நிகழ்வுகளுக்கு செல்லக்கூட அனுமதி மறுக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. கிடைக்காத ஒரே பாஸ் இ பாஸ் என்று பலரும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேதனையுடன் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

தேனிக்கு உறவினர் வீட்டுக்கு வந்த பெண் மீண்டும் திருப்பூருக்கு செல்ல விண்ணப்பித்தார்.ஆனால் மூன்று முறைக்கு மேல் நிராகரிக்கப்பட்டது. இதேபோல் பெங்களூருவில் இருந்து திருமணத்திற்கு வர விரும்பியவருக்கு இ பாஸ் நிராகரிக்கப்பட்டுள்ளது. அதற்கு அவர்கள் சொன்ன காரணம், விஏஒவிடம் போய் திருமணம் நடைபெறுவதற்கான சான்றிதழ் வாங்கி வர அறிவுறுத்தியுள்ளார்கள்.

இதேபோல் திருப்பூரில் இருந்து ஒருவர் உறவினரின் இறுதிசடங்கில் கலந்து கொள்வதற்காக திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு செல்ல விண்ணப்பித்தார். ஆனால் இறுதி சடங்கில் கலந்து கொள்ள முடியவில்லை. அடுத்த நாள் தான் அனுமதி கிடைத்தது. ஆனால் அதற்குள் அவரது உடலை அடக்கம் செய்துவிட்டார்கள். இதனால் அவர் இறுதிசடங்கில் பங்கேற்க செல்லவில்லை.

திருமண நிச்சயதார்த்ததிற்க்காக கள்ளக்குறிச்சியிலிந்து மயிலாடுதுறை செல்வதற்காக 24-மணிநேரம் ஆகியும் இன்னும் எந்தவிதமான பதிலும் வரவில்லை என்று தண்டபானி என்பவர் வேதனை தெரிவித்தார். இப்படி தமிழகம் முழுவதும் தினமும் ஏராளமான மக்கள் மனக்குமுறலை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

இதுபற்றி அதிகாரிகள் வட்டாரத்தில் விசாரித்த போது, திருமணம், மருத்துவ சேவை, மரணம் இது மாதிரியான காரணங்களுக்கு தான் இ-பாஸ் எளிதாக கிடைக்கும். இதில் திருமணம் , மருத்துவம் இரண்டுக்கும் கட்டாயம் சரியான ஆவணங்களை (ப்ரூப்) கொடுக்க வேண்டும். ஆன்லைனில் நீங்கள் விண்ணப்பிக்கும் போது உங்களுடைய இருப்பிட சான்றுக்கான சான்றிதழ் (அட்ஸ் ப்ரூப் வேணும் -போற எல்லோருக்கும் )நீங்கள் எங்கு போறீங்களோ அந்த வீட்டினுடைய அட்ரஸ் ப்ரூப் வேணும் கல்யாணத்திற்கு செல்வதாக சொன்னால் கட்டாயம் பத்திரிக்கை வேண்டும். குறிப்பாக அதில் இபாஸ் அப்ளை செய்பவரின் பெயர் இருக்க வேண்டும் அப்படி இருந்தால் மட்டுமே கிடைக்கும் என்கிறார்கள். மருத்துவ காரணம் என்றால் அதற்கு சான்றிதழ்களை அப்லோடு செய்ய வேண்டும். ஆவணங்கள் சரியாக இருந்தால் கிடைக்கும் என்கிறார்கள்..

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்