மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் துரைமுருகன்..!

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் துரைமுருகன்..!

சென்னை:

உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுக பொருளாளர் துரைமுருகன் இன்று வீடு திரும்பினார்.

காய்ச்சல் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் திமுக பொருளாளர் துரைமுருகன் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது சிகிச்சை முடிந்து துரைமுருகன் வீடு திரும்பினார்.

கடந்த மாதம் 24ம் தேதி உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்