ஓட்டுநர் உரிமம் பெற இனி கல்வித்தகுதி இல்லை!

ஓட்டுநர் உரிமம் பெற இனி கல்வித்தகுதி இல்லை!

புதுடெல்லி:

போக்குவரத்து வாகனங்களை இயக்க ஓட்டுநர் உரிமம் பெற இனி கல்வித்தகுதி தேவையில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஓட்டுநர் லைசன்ஸ் பெற குறைந்தபட்ச கல்வித்தகுதியாக 8ம் வகுப்பு கல்வித்தகுதி இருக்க வேண்டும் என மத்திய மோட்டார் வாகன சட்டம் 1989ன் 8வது விதிமுறை தற்போது உள்ளது.

இந்த விதிமுறையானது கிராமப்புறங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கிய கல்வித்தகுதி இல்லாத திறமையான ஓட்டுனர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக புகார்கள் எழுந்தது.

இந்நிலையில், மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம், வாகனம் ஓட்டுவதற்கு கல்வித்தகுதியை விட திறமையே முக்கியம் என உணர்ந்து, குறைந்தபட்ச கல்வித்தகுதி பெற வேண்டும் என்ற நிபந்தனையை ரத்து செய்ய முடிவு எடுத்துள்ளது.

விரைவில் இதற்கான வரைவு அறிவிப்பாணையை மத்திய அரசு வெளியிடவுள்ளது. எனினும் சாலையில் உள்ள போக்குவரத்து குறியீடுகளின் அர்த்தத்தை தெரிந்துகொள்ளும் வகையில், ஓட்டுனர் பயிற்சி பள்ளிகள் கற்றுத்தர வேண்டும் எனவும் அமைச்சகம் கண்டிப்பாக உத்தரவிட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்