மூளையில் பாதிப்பு… பைத்தியமாவது நிச்சயம்… மதுப்பிரியர்களுக்கு எச்சரிக்கை…!!

  • In General
  • September 11, 2020
  • 150 Views
மூளையில் பாதிப்பு… பைத்தியமாவது நிச்சயம்… மதுப்பிரியர்களுக்கு எச்சரிக்கை…!!

மது பழக்கம் மற்றும் புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு மனநலம் பாதிக்கப்படும் என விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளனர்.

நல்ல ஆரோக்கியமான மனநிலையையும், உடல் நிலையையும் பேணி பாதுகாப்பதால் மட்டுமே, நீண்ட ஆயுட்காலம் பெற்று நல்ல வாழ்க்கையை வாழ முடியும். இருப்பது ஒரு வாழ்க்கை அதை சந்தோஷமாக வாழ்ந்து பார்ப்போம் என்பதை தவறான அர்த்தத்தில் புரிந்துகொண்டு, மது அருந்துதல் மற்றும் புகை பிடித்தல் உள்ளிட்ட போதைப் பழக்கத்திற்கும் ஒரு சில தீய பழக்கங்களுக்கும் மனிதர்கள் அடிமையாகி தங்களது வாழ்க்கையை சீரழித்து வருகின்றனர்.

இந்நிலையில், மது அருந்துதல் மற்றும் புகை பிடிப்பதால் மனநலம் பாதிக்கப்படுவதாக நெதர்லாந்து மற்றும் ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.மது அருந்துவதால் மூளையின் மற்றும் அமித்லாக் மற்றும் ஹிப்போகேம்பஸ் பகுதி சுருங்குகிறது. புகை பிடித்தலாலும் ஹிப்போகேம்பஸ் அளவு குறைகிறதாம். தீவிரமான மதுப் பழக்கம் மற்றும் புகை பிடித்தல் இரண்டும் சேர்ந்தால், மூளையின் செயல்திறன் குறைவதுடன், மனநலம் பாதிக்கப்படுவது உறுதி என்கின்றனர் விஞ்ஞானிகள்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்