சுகாதார சீர்கேடு; அதிகாரிகள் அலட்சிய பேச்சு

சுகாதார சீர்கேடு; அதிகாரிகள் அலட்சிய பேச்சு

ஒசூர்:

ஓசூர் அருகே சுகாதார சீர்கேடு காரணமாக முறையிட்ட பொதுமக்களை சுகாதார ஆய்வாளர் ஒருமையில் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள உத்தனப்பள்ளி கிராமத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட வீடுகள் உள்ளன. இந்தியன் வங்கி, மருத்துவமனை, பேருந்து நிறுத்தகம் உள்ளிட்டவைக்காக சுற்றுப்பகுதி கிராம மக்கள் அனைத்துவிதமான வசதிகளுக்கு உத்தனப்பள்ளி கிராமத்தை நோக்கியே வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், உத்தனப்பள்ளி கிராமத்தில் சாக்கடைகள் அடைப்பு ஏற்ப்பட்டு, வீடுகள் தோறும் கழிவுநீர் தேங்கி குட்டைபோல் நிற்கின்றன.

கழிவுநீர் கால்வாய்கள் நிரம்பி துர்நாற்றம் வீசிவரும் நிலையில், கொசுக்களின் உற்பத்தி அதிகரித்து வருவாதல், உத்தனப்பள்ளி அருகில் உள்ள கிராமத்தில் டெங்கு காய்ச்சலால் சிகிச்சை பெற்று வரும் சம்பவத்தால் உத்தனப்பள்ளி கிராமத்தினரும் அச்சமடைந்துள்ளனர்.

இதுக்குறித்து பலமுறை சுகாதார ஆய்வாளரிடம் முறையிட்டும், பொதுமக்களை ஒருமையில் பேசி சுத்தப்படுத்தாமல் உதாசிணப்படுத்தி வருவதாக உத்தனப்பள்ளி கிராமத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.

நோய் பரவும் அபாயம் இருப்பதால், அசம்பாவிதம் நடைப்பெறும் முன்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்