கடற்கரையில் சுத்தம் செய்ய பிரதமர் மோடிக்கு ராமதாஸ் பாராட்டு

கடற்கரையில் சுத்தம் செய்ய பிரதமர் மோடிக்கு ராமதாஸ் பாராட்டு

சென்னை:
பிரதமர் மோடி கோவளம் கடற்கரையில் அரை மணி நேரமாக சுத்தம் செய்தார். இந்த வீடியோ பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்த வீடியோ சமூக வலைதளம் மற்றும் தொலைக்காட்சிகளில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

சென்னை கோவளம் கடற்கரையில் அலையில் அடித்து வரப்பட்டு கிடந்த பிளாஸ்டிக் குப்பைகளை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அப்புறப்படுத்தியிருப்பது பாராட்டத்தக்கது.

தூய்மை முக்கியம், பிளாஸ்டிக் கழிவுகள் மிகவும் ஆபத்தானவை என்பதை அனைவரும் உணர வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்