மருத்துவர்கள் போராட்டம்

மருத்துவர்கள் போராட்டம்

ஓசூர்:

ஒசூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சியில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையில் நாளொன்றிற்கு சூளகிரி, பாகலூர், தேன்கனிக்கோட்டை, தளி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கானோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

நூற்றுக்கணக்கான தாய்மார்கள் பிரசவத்திற்காகவும், கர்ப்பிணி பெண்கள் சிகிச்சைக்கெனவும் வந்து செல்லக்கூடிய முக்கிய மருத்துவமனையாக விளங்கி வருகிறது.

இந்தநிலையில் இன்று ஓசூர் அரசு மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் தலைமை மருத்துவர் பூபதி தலைமையில் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவர்களும், காய்ச்சல், சர்க்கரை நோய் உள்ளிட்டவைகளுக்காக சிகிச்சை பெற வரும் நோயாளிகள் மருத்துவர்களில்லாததால் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

நோயாளி ஒருவர் சிகிச்சை பெற முடியாததால் உடல்நலக்குறைவுக்காரணமாக மயங்கி விழுந்த சம்பவமும் நிகழ்ந்தநிலையில் தமிழகம் முழுவதும் பல்வேறு பிரச்சனைகளை பொதுமக்கள் சந்தித்து வருகின்றனர்.

நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்களை நியமிக்க வேண்டும், கிராம சேவை செய்த டாக்டர்களுக்கு பட்டமேற்படிப்பில் 50% இட ஒதுக்கீடு உள்ளிட்ட 6 கோரிக்கைகளை நீண்ட நாட்களாக அரசு மருத்துவர்கள் கேட்டு வரும் நிலையில், தமிழக அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளில் கவனம் கொண்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு மருத்துவர்களின் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்திற்கு முடிவு செய்ய வழிவகை செய்திட நோயாளிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்