சிறுநீரை வாயால் உறிஞ்சிய டாக்டர்

  • In General
  • November 22, 2019
  • 192 Views
சிறுநீரை வாயால் உறிஞ்சிய டாக்டர்

பெய்ஜிங்:

சீன விமானத்தில் உயிருக்கு போராடிய முதியவரின் சிறுநீரை வாயால் உறிஞ்சி காப்பாற்றிய டாக்டருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

சீனாவில் உள்ள குவாங்சோவிலிருந்து விமானம் ஒன்று நியூயார்க் நகருக்கு கடந்த 19ம் தேதி புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் இருந்த முதியவர் ஒருவர் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

விமானத்திலிருந்த டாக்டர்கள் இருவர் முதியோரின் உடல்நிலை பரிசோதனை செய்ததில், அவரின் சிறுநீரை வெளியேற்றினால் தான் உயிர் பிழைக்க முடியும் என தெரிவித்தனர். ஆனால், முதியோர் உயரமான பகுதியில் இருந்தால் மட்டுமே சிறுநீர் வெளியேறும் சூழ்நிலை இருந்தது.

இதனையடுத்து, டாக்டர்கள் நோயாளிக்கு பொருத்தப்பட்டிருந்த குழாயின் மூலம் சிறுநீரை வாயால் உறிஞ்சி வெளியேற்றத் தொடங்கினர். சுமார் 800 மில்லி சிறுநீ¬ரை வெளியேற்றிய பின், அந்த முதியவர் இயல்பு நிலைக்கு திரும்பினார். டாக்டரின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்