வேலூர் மக்களவைத் தேர்தலில் திமுக வெற்றி

வேலூர் மக்களவைத் தேர்தலில் திமுக வெற்றி

வேலூர்:

வேலூர் மக்களவைத் தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், 9,018 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.

கடந்த 5ம் தேதி நடந்து முடிந்த வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்கியது.

தொடர்ந்து பல சுற்றுக்கள் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் முன்னிலை பெற்றுவந்த நிலையில், கடைசி சில சுற்றுகளில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றிபெற்றுள்ளார்.

இதில், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 4,84,980 வாக்குகளும் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 4,77, 199 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி 26,995  வாக்குகளும் பெற்றுள்ளனர்.

வேலூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட 6 சட்டப்பேரவை தொகுதிகளில் அணைகட்டு தொகுதிகளில் மட்டும் திமுகவைவிட அதிமுக அதிக வாக்குகள் பெற்றுள்ளன.

திமுக வெற்றியை அடுத்து, தமிழகத்தில் திமுக கூட்டணி எம்பிக்களின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்