திமுகவுக்கு பயத்தை காட்டிய இரட்டை இலை

திமுகவுக்கு பயத்தை காட்டிய இரட்டை இலை

வேலூர்:
வேலூர் பாராளுமன்ற தொகுதியில் திமுக வெற்றி பெற்றிருந்தாலும் அதிமுக மிகவும் சந்தோஷத்தில் உள்ளது என்றே கூறலாம்.

நேற்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்து 3 மணி நேரமாக அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் முன்னிலை பெற்று வந்தார்.

இதற்கு காரணம் கிராமங்களில் இன்றும் இரட்டை இலைக்கு மவுசு இருக்கிறது. இதனால் அதிமுகவுக்கு செல்வாக்கு சரியாமல் உள்ளது என்று தெரிகிறது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறந்த பின்னர் கட்சி உடைந்தது. இதனால் அமமுக என்ற தனி கட்சி உருவாகியது.

இதன் பின்னர் அதிமுகவுக்கு இரட்டை தலைமையாக தற்போது செயல்பட்டு வருகின்றனர்.

இப்படி இருந்தும் இன்னும் மவுசு குறையாமல் உள்ளதையே இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகிறது.
அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 4,77,179 வாக்குகள் பெற்றுள்ளார். அதே போன்று திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 4,85,340 வாக்குகள் பெற்றார்.

திமுக வேட்பாளரை விட அதிமுக வேட்பாளர் 8,141 வாக்குகள் குறைவாக பெற்றுள்ளார். இதனால் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

எனவே இந்த குறைந்த வாக்கு வித்தியாசத்தில் அதிமுக தோல்வியடைந்தாலும் கட்சியினர் தற்போது உற்சாகத்துடன் உள்ளனர் என்றே கூறலாம்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்