சிஏஏ.,வுக்கு எதிரான கூட்டம்; திமுக பங்கேற்கவில்லை

சிஏஏ.,வுக்கு எதிரான கூட்டம்; திமுக பங்கேற்கவில்லை

புதுடெல்லி:

டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான எதிர்க்கட்சி கூட்டத்ததில் திமுக பங்கேற்ககவில்லை.

காங்கிரஸ் செயல் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெறும், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான எதிர்க்கட்சிகள் கூட்டம் டெல்லியில் நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டத்தில், விசிகவின் திருமாவளவன், ஜேஎம்எம்-ன் ஹேமந்த் சோரன், இடதுசாரிகள் டி ராஜா, யெச்சூரி பங்கேற்றுள்ளது. திமுக, சிவசேனா, திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்கவில்லை.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஏற்கெனவே திமுக காங்கிரஸ் இடையே சலசலப்பு ஏற்பட்ட நிலையில், காங்கிரஸ் கூட்டியுள்ள இந்த கூட்டத்தில் திமுக பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்