வைகோவுக்கு மாற்று..! திமுக வேட்பாளர் மனுதாக்கல்!

வைகோவுக்கு மாற்று..! திமுக வேட்பாளர் மனுதாக்கல்!

சென்னை:

ராஜ்யசபா தேர்தலுக்கு வைகோ வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில், திமுக மாற்று வேட்பாளரை களமிறக்கியுள்ளது.

கடந்த 2009ம் ஆண்டு சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசியதாக சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையதில் வழக்கு பதியப்பட்டது.

இதனையடுத்து, இந்த வழக்கு எம்பி., மற்றும் எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. வழக்கு விசாரணைகள் முடிந்த நிலையில், அவருக்கு ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. பின்னர் அந்த தீர்ப்பு நிறுத்திவைக்கப்பட்டது.

திமுக சார்பில் மதிமுகவிற்கு ஒதுக்கப்பட்ட ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வைகோ தேர்வு செய்யப்பட்டிருந்தார். அவர் சிறை தண்டனை பெற்றிருந்தால் அவர் எம்.பி. ஆக முடியாது என்ற கேள்வி எழுந்தது. ஆனால், வைகோ மனு தாக்கல் செய்யலாம்; அவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவதில் சிக்கல் இருக்காது எனப்பட்டது.

இந்நிலையில், கடந்த 6ம் தேதி வைகோ மனுதாக்கல் செய்தார். அவருடன் 2 திமுக வேட்பாளர்களும் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறவுள்ளநிலையில், தேச துரோக வழக்கில் தண்டனை பெற்றால் ஒருவேளை வைகோ மனு மற்ற கட்சியினர் எதிர்க்கலாம் எனவும், அதன்மூலம் வைகோவின் மனு நிராகரிக்கப்படலாம் எனவும் பேசப்படுகிறது.

இதனால், மாற்று வேட்பாளராக திமுகவை சேர்ந்த இளங்கோ இன்று வேட்புமனுவை தாக்கல் செய்கிறார். வைகோ மனு ஏற்கப்படும் பட்சத்தில் இந்த மனுவை வாபஸ் பெறுவார் என கூறப்படுகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்