ஏடிஎம்எளில் பிராந்திய மொழிகள் நீக்கம் : நிர்மலா பதில்

ஏடிஎம்எளில் பிராந்திய மொழிகள் நீக்கம் : நிர்மலா பதில்

மத்திய அரசு இந்திக்கு முக்கியத்துவம் அளித்து வரும் வகையில் நிகழும் சம்பவங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், திமுக எம்பி திருச்சி சிவா தனது ட்விட்டர் பக்கத்தில் வௌியிட்டுள்ள பதிவில், ‘வங்கிகள் மற்றும் ஏடிஎம்களில் பிராந்திய மொழிகள் நீக்கம் செய்திருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது. இதில் ஏற்கெனவே இருந்த நிலையே தொடர வேண்டும்’ என தெரிவித்துள்ளார். இதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்துள்ள பதிலில் ‘வங்கிகள் மற்றும் ஏடிஎம்களில் பிராந்திய மொழிகளை நீக்க வேண்டும் என நிதியமைச்சகத்தில் இருந்து எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.

பிராந்திய மொழிகளை பயன்படுத்துவதை நாங்கள் ஊக்குவிக்கிறோம்.எனவே, எங்காவது பிராந்திய மொழிகள் நீக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்திருந்தால், தயவு செய்து அதை எனது கவனத்துக்கு கொண்டு வருமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார். புகாருக்கு உடனடியாக பதிலளித்தமைக்கு நன்றி என நிர்மலா சீதாராமனுக்கு பதிலளித்துள்ள திருச்சி சிவா எம்பி, அந்த பதிவில், கனரா வங்கி சலான் மற்றும் இந்திய வங்கி டிடி படிவம் இணைத்துள்ளார். அவற்றில் இந்தி மற்றும் ஆங்கிலம் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதை உதாரணமாக சுட்டிக்காட்டியுள்ள அவர், நிதியமைச்சகம் உத்தரவிடவில்லை என்றால் இது எப்படி நிகழ்ந்தது என கேள்வி எழுப்பியுள்ளார். சில வங்கிகளில் பிராந்திய மொழிகள் நீக்கப்பட்டு, இந்தி மற்றும் ஆங்கிலம் பயன்படுத்தப்படுவதாக ட்விட்டரில் மேலும் சிலர் புகார் தெரிவித்துள்ளனர்

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்