‘‘நீர் வரத்து அதிகரித்தால் மட்டுமே காவிரி நீர் திறப்பு’’ கர்நாடக அமைச்சர் சிவகுமார் தகவல்!

‘‘நீர் வரத்து அதிகரித்தால் மட்டுமே காவிரி நீர் திறப்பு’’ கர்நாடக அமைச்சர் சிவகுமார் தகவல்!

பெங்களூரு:

காவிரி படுக்கையில் நீர்வரத்து அதிகரித்தால் மட்டுமே உரிய நீர் திறக்கப்படும் என கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் தலைவர் மசூத் உசேன் தலைமையில் கடந்த 28ம் தேதி, டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், தமிழகத்துக்கு ஜூன் மாதத்துக்குரிய 9.2 டிஎம்சி காவிரி நீரை திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் கூறுகையில், கர்நாடக காவிரி படுகையில் உள்ள 4 அணைகளில் மொத்தம் 13 டிஎம்சி தண்ணீர் தான் உள்ளது. காவிரி படுகையில் நீர்வரத்து அதிகரித்தால் மட்டுமே காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு படி முழுமையான தண்ணீர் திறக்க முடியும். இல்லையெனில் விகிதாச்சார அடிப்படையில் தான் தண்ணீர் திறக்கப்படும். தற்போதைய நீர் இருப்பு நிலை குறித்து ஆணையத்திற்கு தெரிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்