டி.கே.சிவக்குமாரின் ஓட்டல் முன்பதிவு ரத்து!

டி.கே.சிவக்குமாரின் ஓட்டல் முன்பதிவு ரத்து!

மும்பை:

கர்நாடக அமைச்சர் டி.கே.சிவக்குமாரின் மும்பை ஓட்டல் முன்பதிவை ஓட்டல் நிர்வாகம் ரத்து செய்துள்ளது.

கர்நாடகாவில் ராஜினாமா செய்துள்ள 13 எம்எல்ஏக்கள் மும்பை ஓட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களை சந்திப்பதற்காக காங்கிரஸ் அமைச்சர் டி.கே.சிவக்குமார் மும்பை கன்வென்ஷன் சென்டர் ஓட்டலில் முன்பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில், டி.கே.சிவக்குமார் முன்பதிவை அந்த ஓட்டல் நிர்வாகம் அவசரமாக ரத்து செய்துள்ளது. அதே ஓட்டலில் அதிருப்தி எம்எல்ஏக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்னும் சற்றுநேரத்தில், அவர்களை சந்திக்க ஓட்டலுக்கு விரைந்துள்ள டி.கே.சிவக்குமாரை, ‘‘கோ பேக்.. கோ பேக் சிவக்குமார்’’ என அதிருப்தி எம்எல்ஏக்கள் அந்த ஓட்டலின் நுழைவு வாயில் அருகே கோஷமிட்டு வருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்