கர்நாடக முன்னாள் அமைச்சர் திடீர் கைது

கர்நாடக முன்னாள் அமைச்சர் திடீர் கைது

பெங்களூரு:
கர்நாடக மாநிலத்தில் முன்னாள் நீர்பாசனத்துறை அமைச்சர் டி.கே.சிவகுமார் இன்று அமலாக்கத்துறையால் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

கடந்த 2017ம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் முதலமைச்சராக சித்தராமையா இருந்தார்.

அப்போது அந்த அமைச்சரவையில் நீர்பாசனத்துறை அமைச்சராக டி.கே.சிவகுமார் பதவியில் இருந்தார்.

அந்த சமயத்தில் அவரின் டெல்லி வீடு, அலுவலகம் என பல இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது.

டெல்லி வீட்டில் ரூ.8.50 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கமளிக்க கடந்த வருடம் 2017ம் ஆண்டு அமலாக்கத்துறை சிவக்குமாருக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இதனை தொடர்ந்து சிவக்குமார் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் சிவக்குமார் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.

கடந்த 5 நாட்களாக விசாரணை நடத்தப்பட்ட நிலையில் இன்று அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவ கர்நாடக காங்கிரசில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்