மாற்றுத்திறனாளிகள் விளையாட்டுப்போட்டி

  • In Sports
  • November 8, 2019
  • 218 Views
மாற்றுத்திறனாளிகள் விளையாட்டுப்போட்டி

ஒசூர்:

ஓசூரில், காதுகேளாத மாணவர்களுக்கான மாநில அளவிலான விளையாட்டுப்போட்டிகளை முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி தொடக்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஓசூரில் காதுகேளாத மாணவ மாணவிகளுக்கான மாநில விளையாட்டுப்போட்டிகளில் 300 மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட காதுகேளாதோருக்கான நலச்சங்கத்தின் 25 வது ஆண்டுவிழாவினை முன்னிட்டு ஓசூரில் காதுகேளாதோருக்கான மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் 3 நாட்கள் நடைப்பெற உள்ளது, முதல் நாளான இன்று விளையாட்டு போட்டிகளை முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகளில் சென்னை, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, அரியலூர், சேலம் உள்ளிட்ட 13 மாவட்டங்களை சேர்ந்த 300 மாணவ மாணவிகள் பங்கேற்றுள்ளனர்.

10,13,17 ஆகிய வயதினருக்குட்பட்டதாக மூன்று பிரிவுகளாக மாணவிகளுக்கு நடனப்போட்டி, கோளம் வரைதல் உள்ளிட்ட போட்டிகளும், மாணவர்களுக்கு வண்ணம் தீட்டுதல், ஓவியப்போட்டி உள்ளிட்டவைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

பிறவிலேயே காது கேளாத பிள்ளைகள் வாய் பேச முடியாமல் சமூகத்தில் வளர்ந்து வருகின்றனர், மற்ற மாற்று திறனாளிகளை காட்டிலும் வாய்ப்பேச முடியாத காதுகேளாத மாற்றுத்திறனாளிகள் மிகவும் திறமையானவர்களாக இருந்து வருவதாகவும், அவர்களிடம் திறமைகள் கொட்டி கிடக்கின்றன.

இவர்களை சமூகத்தில் மற்ற மனிதர்களை போல ஏற்காமல் ஓரங்கட்டப்படும் நிலை இருப்பதாகவும் அவர்களையும் இந்த சமூகம் அரவணைத்து ஊக்கவிக்க வேண்டுமென்பதை வலியுறுத்தும் விதமாக இந்த போட்டியை நடத்தி வருவதாக விழா ஏற்ப்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்துள்ள காதுகேளாத மாணவ மாணவியர், மற்ற காது கேளாத சக மாற்றுத்திறனாளிகளை சந்தித்துக்கொண்டதில் புதிய உலகத்தை கண்டதுபோல மகிழ்ச்சியுடன் உற்சாகமடைந்துள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்