பாக்., ஜெர்ஸி ஆடையில் தோனியின் பெயர்..! வைரலாகும் புகைப்படம்..!!

  • In Sports
  • May 24, 2019
  • 196 Views
பாக்., ஜெர்ஸி ஆடையில் தோனியின் பெயர்..! வைரலாகும் புகைப்படம்..!!

சென்னை:

பாகிஸ்தான் நாட்டு கிரிக்கெட் அணியின் ஜெர்ஸி ஆடையில், தோனியின் பெயர் உள்ள புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் பகிர்ந்துள்ளார்.

உகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இம்மாதம் 30ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட அணிகள் இங்கிலாந்து சென்றுள்ளனர்.

இந்நிலையில், பாகிஸ்தானை சேர்ந்த ஷேசாத் உல் ஹசான் என்ற ரசிகர் தங்கள் நாட்டு கிரிக்கெட் அணியின் ஜெர்ஸி ஆடையில் தோனியின் பெயர் மற்றும் எண் எழுதப்பட்ட ஆடையை வாங்கி அதனை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் தோனிக்கு உலகளவில் ரசிகர்கள் அதிகம் என்பதை மீண்டும் இந்த பதிவு உணர்த்துகிறது. இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்