சனம் ஷெட்டியை திருமண செய்யமாட்டேன்

  • In Cinema
  • February 1, 2020
  • 202 Views
சனம் ஷெட்டியை திருமண செய்யமாட்டேன்

சென்னை:

நடிகை சனம் ஷெட்டியை திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் தெரிவித்துள்ளார்.

‘அம்புலி’ ‘கதம் கதம்’ போன்ற படங்களில் நடித்தவர் சனம் ஷெட்டி, மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட படங்களிலும் இவர் நடித்துள்ளார். இவர் தன்னை காதலித்து நிச்சயம் செய்தபின் திருமணம் செய்ய மறுப்பதாக நடிகை சனம் ஷெட்டி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளார்.

அதில், நானும் தர்ஷனும் காதலித்து, நிச்சயதார்த்தம் நடந்தநிலையில், திருமணம் செய்ய மறுப்பதாகவும், என் மீது அபாண்டமாக பழி சுமத்துகிறார். என்னிடம் ரூ.15 லட்சம் வரை வாங்கி மோசடி செய்துள்ளார். கொலை மிரட்டலும் விடுக்கிறார். எனவே அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பதிலளித்துள்ள தர்ஷன், பிக்பாஸ் சக போட்டியாளர்களிடம் பேச வேண்டாம் எனவும், எங்கு சென்றாலும் கூடவே என்னை அழைத்து செல்லவேண்டும். எனக்கு எதிராக பிகினி போட்டோ ஷூட் எடுத்தார். எனக்கு 3 பட வாய்ப்புகளையும் தற்கொலை மிரட்டல் விடுத்து தவறச்செய்தார்.

எனக்கு என் அண்ணன் தான் பண உதவி செய்து வருகிறார். இவர் பணம் கொடுக்கவில்லை. விசா தொடர்பாக ரூ.3 லட்சம் கொடுத்தார் அதையும் திருப்பி கொடுத்துவிட்டேன். அவர் என்னை மிகவும் டார்ச்சர் செய்து வருவதாகவும், அவரை இனி திருமணம் செய்ய மாட்டேன் எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்