‘இந்தியன் 2’ படத்தில் தர்ஷன்

  • In Cinema
  • October 4, 2019
  • 204 Views
‘இந்தியன் 2’ படத்தில் தர்ஷன்

சென்னை:

கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தில், பிக்பாஸ் பிரபலமான தர்ஷன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘பிக்பாஸ் 3’ நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராக நடிகர் தர்ஷன் கலந்துகொண்டார். இவர்தான் டைட்டிலை வெல்வார் என கூறப்பட்டுவந்த நிலையில், திடீரென பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில், வெளியே வந்த தர்ஷன், புதுப்பட வேலைகளில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டார். தற்போது அவர் ‘இந்தியன் 2’ படத்திலும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இளவயது கதாபாத்திரத்துக்கு தர்ஷனை கமல்ஹாசனே சிபாரிசு செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்