நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் சண்டையிட்ட எம்.பி. செந்தில்குமார்

நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் சண்டையிட்ட எம்.பி. செந்தில்குமார்

பாப்பிரெட்டிப்பட்டி:
தருமபுரி மாவட்டத்தில் சாலையை புதுப்பிக்கும் பணிகள் தொடங்கப்படாதததைக் கண்டித்து அதிகாரிளுடன் தருமபுரி எம்.பி., செந்தில்குமார் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

சேலத்திலிருந்து வேலுருக்கு பாப்பிரெட்டிப்பட்டி வழியாக சாலை செல்கிறது. இந்த சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால் அதனை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை சார்பில் 9 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதாக தெரிகிறது.

இதற்கான ஒப்பந்தமும் விட்டு 7 மாதங்களாகியும் இன்னும் பணிகள் தொடங்கப்படவில்லை. இது பற்றிய புகார் எம்.பி. செந்தில்குமாரிடம் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து அவர் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரரை வரவழைத்து சாலையை ஆய்வு மேற்கொண்டார்.

பணிகள் இன்னும் ஏன் தொடங்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு அதிகாரிகள் சரியாக பதில் அளிக்கவில்லை என்று தெரிகிறது.

நிதி ஒதுக்கி கிட்டத்தட்ட 7மாதங்களாகியும் இன்னும் ஏன் தொடங்கவில்லை ஏன், இதற்கான காரணம் என்ன என்று கேட்டுள்ளார்.

நீங்கள் சாலையை சீரமைக்காததால் எத்தனை விபத்துக்கள் இதில் நடக்கிறது என்றாவது உங்களுக்கு தெரியுமா? பல விவரங்களை எம்.பி. செந்தில்குமார் அதிகாரிகளிடம் கேட்டார்.

ஆனால் அவர் கேட்ட கேள்விக்கு எதுவும் பதில் கூறவில்லை அதிகாரிகள். இதனால் இருவருக்கும் இடையே காரசாரமான விவாதங்கள் ஏற்பட்டது.

இதனை அங்கிருந்த பொதுமக்கள் தங்களின் செல்போன்களில் வீடியோ எடுத்தனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்