தனுஷ் புதிய பட வீடியோ லீக்

  • In Cinema
  • December 18, 2019
  • 179 Views
தனுஷ் புதிய பட வீடியோ லீக்

சென்னை:

தனுஷ் தற்போது நடித்துவரும் ‘டி40’ படத்தின் வீடியோ காட்சிகள் தற்போது லீக் ஆகியுள்ளதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

நடிகர் தனுஷ் நடித்து சமீபத்தில் வெளிவந்த ‘அசுரன்’ படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதைத்தொடர்ந்து, ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படமும் சமீபத்தில் வெளியானது. மேலும், துரை செந்தில்குமார் இயக்கத்தில் ‘பட்டாஸ்’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.

இந்நிலையில், தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் டி40 என்று சொல்லப்படும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் லண்டனில் நடைபெற்று முடிந்த நிலையில் திடீரென 2ம் கட்ட ஷூட்டிங் மதுரையில் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் பெரிய மீசையுடன் நடித்து வரும் படங்கள் மற்றும் வீடியோ அனைத்தும் லீக்காகியுள்ளது. இந்த படத்தின் உண்மையான தலைப்பு ‘சுருளி’ எனவும் சொல்லப்படுகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்