தங்கச்சங்கிலி பரிசளித்த தனுஷ்

  • In Cinema
  • February 12, 2020
  • 195 Views
தங்கச்சங்கிலி பரிசளித்த தனுஷ்

திருநெல்வேலி:

காமெடி நடிகர் யோகிபாபுவுக்கு நடிகர் தனுஷ் தங்கச்சங்கிலி பரிசளித்தார்.

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி தற்போது ஹூரோவாகவும் சில படங்களில் நடித்துள்ளார். இவருக்கு கடந்த 5ம் தேதி மஞ்சு பார்கவி என்பவருடன் எளிமையாக திருமணம் நடைபெற்றது. ஆனால், குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் தவிர திரைத்துறையினர் யாரும் கலந்துகொள்ளவில்லை.

இந்நிலையில், திருமணம் முடிந்து இன்று மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘கர்ணன்’ படபிடிப்பில் கலந்துகொள் திருநெல்வேலிக்கு யோகி பாபு சென்றுள்ளார். அப்போது புதுமாப்பிள்ளையான யோகி பாபுவுக்கு கேக் வெட்டி கொண்டாடினர். யோகி பாபுவுக்கு நடிகர் தனுஷ் தங்கச்சங்கிலியை பரிசாக அணிவித்து ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்