ஆபாச படம் பார்ப்பவர்கள் லிஸ்ட் தயார்

  • In Chennai
  • December 3, 2019
  • 450 Views
ஆபாச படம் பார்ப்பவர்கள் லிஸ்ட் தயார்

சென்னை:

இணையதளங்களில் ஆபாச படம் பார்ப்பவர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், குழந்தைகள் ஆபாச படம் பார்த்தால் கைது செய்யப்படுவார்கள் என கூடுதல் டிஜிபி எச்சரித்துள்ளார்.

அமெரிக்க புலனாய்வு துறையின் ஆய்வறிக்கை படி, குழந்தைகளின் ஆபாச படங்களை இந்தியாவில் தான் அதிகம் பார்ப்பதாகவும், தமிழகத்தில் பார்ப்பவர்கள் எண்ணிக்கை அதிகம் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பவர்கள் பட்டியலை தமிழக காவல் துறைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பி வைத்துள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி ரவி தலைமையில் செயல்பட்டுவருகிறது. இந்த பட்டியலின் அடிப்படையில் குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பவர்கள், பதிவிறக்கம் செய்து வைத்திருப்பவர்கள் என கைது நடவடிக்கை தொடங்கும் என கூடுதல் டி.ஜி.பி. ரவி எச்சரித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்