எதிர்கட்சியாக செயல்படுவோம்

எதிர்கட்சியாக செயல்படுவோம்

மும்பை:

மகாராஷ்டிராவில் எதிர்கட்சியாக செயல்படுவோம் என பா.ஜ.,வின் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

முதல்வர் பதவியை பட்னாவிஸ் ராஜினாமா செய்வதாக ஆளுநரிடம் கடிதம் கொடுத்தார். பின்னர் தேவேந்திர பட்னாவிஸ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், போதுமான மெஜாரிட்டி இல்லாததால் ராஜினாமா செய்தேன். மகாராஷ்டிராவில் எதிர்கட்சியாக செயல்படுவோம் என தெரிவித்தார்.

மேலும், அஜித் பவார் எங்களுக்கு உதவுதாக கூறினார். அவருடன் பேசிய பிறகே நாங்கள் ஆட்சி அமைத்தோம். சட்டமன்ற குழு தலைவர் என்பதால் அவரிடம் தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் இருப்பார்கள் என நினைத்தோம்.

நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் கூட்டணியில் இதற்கு மேல் தொடர விருப்பமில்லை என அஜித் பவார் என்னிடம் கூறினார். அஜித் ராஜினாமா செய்ததால் எங்களிடம் மெஜாரிட்டி இல்லை. பா.ஜ., எந்தக் கட்சிகளையும் உடைக்காது. குதிரை பேரத்தில் ஈடுபடாது எனவும் அவர் தெரிவித்தார்.

பா.ஜ.,வின் எண்ணிக்கை குறைந்த பிறகு சிவசேனா பேரம் பேசத்தொடங்கியது. சுழற்சி முறையில் முதல்வர் என எந்த வாக்குறுதியும் சிவசேனாவுக்கு அளிக்கப்படவில்லை என தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்