”வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு” – தேவேகவுடா

”வரலாற்று சிறப்புமிக்க  தீர்ப்பு” – தேவேகவுடா

பெங்களூரு:

கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார், காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சியை சேர்ந்த 14 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இது பற்றி முன்னாள் பிரதமர் தேவேகவுடா பெங்களூருவில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

கட்சிக்கு எதிராக செயல்பட்ட 17 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் ரமேஷ்குமார் தகுதி நீக்கம் செய்துள்ளார்.

நாட்டில் பல்வேறு மாநிலங்களில் சபாநாயகர் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியது உண்டு. ஆனால் சபாநாயகர் ரமேஷ்குமார் எடுத்துள்ள தகுதி நீக்க நடவடிக்கை வரலாற்று சிறப்பு மிக்கது. இது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி. இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்