யானைகளால் பயிர்கள் நாசம்; இழப்பீடு வழங்க கோரிக்கை

யானைகளால் பயிர்கள் நாசம்; இழப்பீடு வழங்க கோரிக்கை

ஒசூர்:

யானைகளால் ராகி பயிர்கள் சேதமடைந்ததால், இழப்பீடு வழங்க விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் உள்ள 75 யானைகள் வனப்பகுதியில் முகாமிட்டு இருப்பதால் இந்த யானைகள் அடிக்கடி இரவு நேரங்களில் விளைநிலங்களில் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

இன்று காலை சுமார் பத்துக்கும் மேற்பட்ட யானைகள், சாப்பரானபள்ளி கிராமத்தைச் சேர்ந்த பூங்காவனம் என்பவருடைய விளைநிலத்தில் வைக்கப்பட்டுள்ள ராகி வைக்கோல் இந்த 10க்கும் மேற்பட்ட யானைகள் சேதப்படுத்தி உள்ளது.

இதன் மதிப்பு சுமார் ஒரு லட்சம் இருக்கும் என விவசாயிகள் கூறுகின்றனர் எனவே இந்த யானைகளால் இந்த ராகி பயிர் பாதிப்பு அரசுஎங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் மேலும் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் முகாமிட்டிருக்கும் யானைகளால் ஆடு மாடு மேய்ப்பவர்கள் பொதுமக்கள் விவசாயிகள் என யாரும் இரவு நேரங்களில் நடமாட வேண்டாம் என வனத்துறை மூலம் எச்சரிக்கை விடுத்தும் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கும் தண்டோர மூலமும்எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்