கூரம்பட்டி கிராமத்தில் டெங்கு கொசு மருந்து அடிக்கும் பணி

கூரம்பட்டி கிராமத்தில் டெங்கு கொசு மருந்து அடிக்கும் பணி

தர்மபுரி:
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு பணிகளை தமிழக சுகாதாரத்துறை செய்து வருகிறது.

இதன் அடிப்படையில் தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம் பாலவாடி ஊராட்சிக்கு உட்பட்ட கூரம்பட்டி கிராமத்தில் டெங்கு கொசு மருந்து அடிக்கும் பணி நடைபெற்றது.

இந்த பணியை பாலவாடி ஊராட்சி செயலர் ஜம்பேரி மேற்பார்வையிட்டார். கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் டெங்கு கொசு மருந்து அடிக்கப்பட்டது.

பள்ளி மற்றும் கழிப்பறை பகுதியிலும் மருந்து அடிக்கும் பணி நடைபெற்றது.

இந்த பணியால் கிராமத்தில் டெங்கு கொசு முற்றிலும் அழிக்கப்படும் என்று ஊராட்சி செயலர் ஜம்பேரி தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்