டெலிவரி ஊழியர்கள் பேராட்டம்

டெலிவரி ஊழியர்கள் பேராட்டம்

ஓசூர்:

‘ஸ்விக்கி’ உணவு டெலிவிரி நிறுவனத்தின் கீழ் இயங்கும் ‘ஷேடோ பேக்ஸ்’ டெவிலிரி ஊழியர்களுக்கு முறையாக சம்பளம் வழங்குவதில்லை எனக் குற்றம் சாட்டி, ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில் இயங்கி வரும் உணவு டெலிவிரிகளில் ஒன்றான ‘ஷேடோ பேக்ஸ்’, ஸ்விக்கி நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இதில் 30ற்க்கும் அதிகமான ஊழியர்கள் முழுநேரமாகவும், 20 இளைஞர்கள் பகுதி நேரமாக பணியாற்றி வருகின்றனர்.

உணவினை ஆர்டர் செய்பவர்கள், கடைசி நேரத்தில் உணவை இரத்து செய்தால் அதற்காக பணம் வழங்கப்படுவதில்லை, வாகன எரிபொருளுக்காக தனியாக பணம் மறுப்பதாக உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தாலும் ஊதியம் சரியான நேரத்திற்கு வழங்காமல் தாமதிப்பதாக கூறி நிறுவன அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய டெலிவிரி ஊழியர்கள், ஸ்விக்கின் நிறுவனத்தில் ஆர்டர் செய்யும் பொதுமக்களுக்கு ஓசூர் பகுதிகளில் அதன் கீழ் இயங்கும் ‘ஷேடோ பேக்ஸ்’ டெலிவிரி மூலம் உணவுகளை வழங்கி வருபவர்களுக்கு சம்பளம் உரிய நேரத்தில் வழங்காததை கண்டித்தும், ஸ்விக்கி நிறுவனத்தின் நேரடி ஊழியர்களாக நியமிக்க கோரி மூன்றாவது நாளாக பணி புறக்கணிப்பில் ஈடுபட்டிருப்பதாக தெரிவித்தனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்