வெயிலில் சாதனை படைத்த டெல்லி..! இதுவரை இல்லாத 48 டிகிரி செல்சியஸ்..!

வெயிலில் சாதனை படைத்த டெல்லி..!  இதுவரை இல்லாத 48 டிகிரி செல்சியஸ்..!

புதுடெல்லி:

வடமாநிலங்களில் வெயில் கடந்த சில நாட்களாக வாட்டி வதைத்து வருகிறது. மேலும், சில நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையமும் தெரித்திருந்த நிலையில், நாட்டின் தலைநகரான டெல்லியில் என்றும் இல்லாத அளவிற்கு வெயில் சுட்டெரித்து வருகிறது.

இந்நிலையில், இன்று டெல்லியில் கடும் வெயில் மற்றும் அனல் காற்று வீசியுள்ளது. என்றும் இல்லாத அளவுக்கு 48 டிகிரி செல்சியஸ் வெயில் சுட்டெரித்தது.

இதற்குமுன் கடந்த 2014 அதிகபட்சமாக 47.8 டிகிரி செல்சியஸ் வெயில் சுட்டெரித்தது. தற்போது அதனை மிஞ்சி 48 டிகிரி செல்சியஸ் வெயில் நிலவியது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்