ஜெ., சொத்து வழக்கு; தீபா, தீபக் ஆஜர்

ஜெ., சொத்து வழக்கு; தீபா, தீபக் ஆஜர்

சென்னை:

ஜெயலலிதா சொத்துக்கள் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தீபா, தீபக் ஆஜராகி விளக்கமளித்தனர்.

ஜெயலலிதா சொத்துக்கள் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. ஏற்கெனவே இந்த வழக்கில் நேரில் ஆஜராக உத்தரவிட்ட நிலையில், தீபா, தீபக் இன்று ஆஜராகி விளக்கமளித்தனர்.

விசாரணையில், ஜெயலலிதா சொத்துக்களின் ஒரு பகுதியை பொது பயன்பாட்டுக்கு ஏன் வழங்கக்கூடாது? என நீதிபதி கேள்வி எழுப்பினர். அதற்கு, ஏழைகளின் நலனுக்காக ஜெயலலிதாவின் சொத்துக்களை பயன்படுத்துவதில் ஆட்சேபனை இல்லை என தீபா தெரிவித்தார்.

மேலும், ஜெயலலிதாவுக்கு சொந்தமான சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க கோரி புகழேந்தி என்பவர் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்தார்.

விசாரணைக்கு பின் செய்தியாளர்களுக்கு தீபா அளித்த பேட்டியில், நீதிபதிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளேன். எங்கள் பூர்வீக சொத்தை நாங்கள் கோருவதை யாரும் தடுக்க முடியாது. ஜெயலலிதா சொத்தில் பங்கு கிடைத்தால் அறக்கட்டளை தொடங்கி ஏழைகளுக்கு உதவி செய்வேன் என தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்